வவுனியா, சிதம்பரபுரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பம்

வவுனியாவில் இன்றைய தினம் இரண்டாம் நாளாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. முதலாவது, இரண்டாவது ஊசிகளை தடுப்பூசிகள் ஏற்றும்நிலையங்களில் அவர்கள் பெற்றுக் கொண்டனர். இரன்டு நாட்களிலும் ஏற்றப்பட்ட ஊசிகளது தொகையை சுகாதார திணைக்களத்திடம் பெறமுடியவில்லை. இந்த நிலையில் மூன்றாம் நாளான நாளை சிதம்பரபுரம் வைத்தியாசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

ஆசிகுளம், சமலங்குளம்,வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தையும் , வரிசை இலக்கத்தையும் (டோக்கன்) பெற்றுக்கொண்டு சிதம்பரபுரம் வைத்தியசாலையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஊசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏற்கனவே அறிவித்தன்படி வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நாளை 09 ஆம் திகதி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது இரண்டாவது ஊசிகளை பெறவுள்ளவர்கள் தங்களுக்கான கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் 10 ஆம் திகதி முதல் வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுபூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தின் தொற்றுயில் பிரிவில் விண்ணப்பபடிவங்களை பெற்று கிராமசேவையாளரிடம் பூர்த்தி செய்து தங்களுக்கான தடுப்பூசிகளை வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் திணைக்கள தலைவரின் கையொப்பத்தோடு ஊசிகளை பெற்றுகொள்ள முடியும். கிராமசேவகர் பிரிவுக்கான நிலையங்களிலும் ஊசிகளை பெற்றுகொள்ள முடியும்.

வவுனியா, சிதம்பரபுரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பம்

Social Share

Leave a Reply