பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அரசாங்கம் உறுதி

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு இன்று (30.03) திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம் எனவும் விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள்
நிறைவடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்,
வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply