எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பயணிப்போர் இதனை கவனத்திற்கொள்ளுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.