வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது எரிபொருள் கொடுப்பனவாக இரண்டு லட்சத்து எண்பத்தாயிரத்து ஐநூறு ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்ற குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.