நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தலைநகரில் வாழ்கின்ற எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உடன் நேற்றைய தினம் (07-04) அமைச்சின் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு தொகுதி, கொட்டாஞ்சேனை மேற்கு வட்டார வேட்பாளரான எஸ். ஆனந்தகுமார் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன் போது தலைநகரில் வாழும் எம் மக்களின் பிரச்சனைகள், அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களின் அடிப்படை தேவைகளை விரைவில் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கொழும்பில் தொழில் புரிகின்றமலையகத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது .
இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எஸ்.ஆனந்தகுமாரிடம் தற்போதைய கொழும்பு வாழ் மக்களின் அடிப்படையாக தீர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டமை விசேட அம்சமாகும்.