சனத் ஜெயசூரிய கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளருமான சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார்.

குறித்த விளையாட்டு மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் கிரிக்கெட் துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளுக்காக பார்வையிட்டதாக தெரிவித்தார்.

இதன்போது பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply