மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை.
மியன்மாரில் இதற்கு முன்னர் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 2000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.