கங்காரூ கிரிக்கெட் அக்கடமி சீருடை அறிமுக நிகழ்வு

கொழும்பில் இயங்கி வரும் கங்காரு கிரிக்கெட் அக்கடமியின் 2025 ஆம் ஆண்டுக்கான சீருடை அறிமுக நிகழ்வு இன்று(19.04) கொழும்பு காமினி திஸாநாயக்க உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போட்டிகளுக்காக பயன்படுத்தும் வெள்ளை நிற சீருடை, பயிற்சிகளுக்காக பாவிக்கப்படும் வர்ண சீருடை, ஏனைய பயிற்சிகளுக்கான காற்சட்டை மற்றும் மேலங்கி ஆகியவற்றுடன் தொப்பியும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த சீருடைகளுக்கு அனுசரணை வழங்கிய வி மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் விமலச்சந்திரன், கங்காரு கிரிக்கெட் அக்கடமியின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கோசலாதேவியிடம் சீருடைகளை கையளித்தார். பின்னர் சகல வீரர்களுக்குமான சீருடைகள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கங்காரு கிரிக்கெட் அக்கடமியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கார்த்திக்செல்வன், உப பயிற்சியாளர் பாரூக் ஆகியோரும் கலந்து கொண்ட அதிவேளை, கங்காரு கிரிக்கெட் அக்கடமி மற்றும் கழக வீரர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கங்காரு கிரிக்கெட் அக்கடமி கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகின்றது. கிரிக்கெட்டை விளையாட ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு சரியான அடிப்படையை வழங்கும் ஒரு கிரிக்கெட் அக்கடமியாக செயற்பட்டு வருகிறது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுள் முன்னணியில் திகழும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் செல்வன் இந்த அக்கடமியின் பயிற்சிகளை வழங்கி வருகிறார். இவரது சிறந்த நுட்பமான பயிற்றுவிப்பு மாணவர்களுக்கு நல்ல அடிப்படையினை வழங்கும் அதேவேளை, திறமையானவர்களை இனம் கண்டு அவர்களை உரிய பாதையில் வழிகாட்டி பாடசாலை அணிகளில் திறமையை காட்டக்கூடிய வகையில் இந்த அக்கடமி மற்றும் பயிற்றுவிப்பளர்கள் வீரர்களை வளர்த்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.

கங்காரூ கிரிக்கெட் அக்கடமி சீருடை அறிமுக நிகழ்வு
கங்காரூ கிரிக்கெட் அக்கடமி சீருடை அறிமுக நிகழ்வு
கங்காரூ கிரிக்கெட் அக்கடமி சீருடை அறிமுக நிகழ்வு
கங்காரூ கிரிக்கெட் அக்கடமி சீருடை அறிமுக நிகழ்வு

Social Share

Leave a Reply