ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை CID யிடம் ஒப்படைப்பு

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிஐடிக்கு அனுப்பப்பட்டது

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்காக இந்த அறிக்கை CIDயிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அறுவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது, மேலும் அதன் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா இருந்தார்.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும், அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதிப்படுத்தினார்.

Social Share

Leave a Reply