அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

அதில், தமது சங்கம் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இந்தத் தொழிலில் தொடர்ந்தும் இருப்பதால், வாகன இறக்குமதிகளை மீள ஆரம்பிக்கும் போது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த சங்கத்தின் பொருளாளர் பிரசாத் மானகே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Social Share

Leave a Reply