வட்டுவாகல் பால கட்டுமான பணிகள் ஜுனில் ஆரம்பம்

நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க வினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் வட்டுவாகல் பாலத்தை பார்வையிட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக இன்றைய தினம் (22.04) பி.ப 1.00 மணியளவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த காலா விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரோடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply