மட்டக்களப்பு – குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக 16 எறிகணைக் குண்டுகள் நேற்று (12/12) மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த எறிகணை குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
