பா.ஜ.க. முன்னாள் எம்.பி யும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளருமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல்
மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடளித்துள்ளார்.
‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கம்பீர் முறைப்பாடளித்துள்ளார்.
தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது