ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இன்று (13.12) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ள அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 69 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் பில் சோல்ட் 23(22) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 4 விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷன 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய யாழ் அணி 9.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்றது. இதில் வனிது ஹசரங்க 37(18) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 22(17) ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக சத்துரங்க டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
புள்ளி பட்டியல்
| இடம் | அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | ஒ.நி.ச.வே |
| 01 | ஜப்னா கிங்ஸ் | 6 | 5 | 1 | 0 | 10 | 2.389 |
| 02 | தம்புள்ள ஜியன்ட்ஸ் | 6 | 3 | 2 | 1 | 7 | -1.115 |
| 03 | கோல் கிளாடியேட்டர்ஸ் | 6 | 2 | 3 | 1 | 5 | -0.106 |
| 04 | கொழும்பு ஸ்டார்ஸ் | 5 | 2 | 3 | 0 | 4 | -0.532 |
| 05 | கண்டி வொரியேர்ஸ் | 5 | 1 | 4 | 0 | 2 | -0.496 |
