கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு!

எதிர்வரும் ஜூன் 11ம் திகதி கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version