இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரியவரும் நிலையில், தற்போது இதன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.