மஹேலவின் கைக்குள் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்நாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்குள் சகலவித அணிகளது பயிற்றுவிப்பாளர்களுக்கும் ஆலோசகராகவும் செயற்படவுள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் 1 ஒரு வருடத்துக்கு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹேல ஜெயவர்த்தன பயிற்றுவிப்பில் “மாஸ்டர் மைன்ட்” என புகழப்பட்ட வருகிறார். அவருடைய நுட்பங்கள் கிரிக்கெட் உலகில் மிக பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன.

இலங்கை அணி மீள் எழ ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர் அணிக்குள் வருவது இலங்கை அணிக்கு மிகபெரிய எழுச்சியினை வழங்கும் என்பதோடு, 19 வயதுக்குட்பட்ட அணி, இலங்கை A அணி உட்பட அணிகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுடனும் அவர் செயற்படவுள்ளார்.

அதன் காரணமாக அணி வீரர்களின் நிலைகளும், அணிகளது நிலைகளும் மேம்படும். அதனடிப்படையில் இலங்கை அணி முன்னேற்றகரமான பாதைக்கும் செல்லும் வாய்ப்புகளுள்ளன.

மஹேலவின் கைக்குள் இலங்கை அணி

Social Share

Leave a Reply