அதிக விலைக்கு மருந்துகளை விற்ற சிறப்பு மருத்துவருக்கு விளக்கமறியல்!

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்ததற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply