இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மட்டும் (19.06) மட்டும் நான்கு பேர் இலங்கைக்கு திரும்ப தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலில் விடுமுறை நாட்களாகிய இன்று (20.06) மற்றும் நாளையும் (21.06) தூதரகம் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இலங்கையர்கள் இலங்கைக்குச் செல்ல விரும்புவார்கள் என்று தாம் நினைப்பதாகவும், ஒரு தூதராக அவர்கள் அனைவருக்கும் தாம் உதவ விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.