எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக கொவிட் அட்டை

எதிர்வரும் காலத்தில் நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக பொதுமக்கள் கொவிட் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (13/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்குள் உள்வாங்கி, அதனை QR ஸ்கேன் முறைமைக்குள் இணைத்து, கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்துவதற்கான புதிய நடைமுறை கொண்டு வரும் வரையில் அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் நான்காம் தடுப்பூசியையும் வழங்க நேரிடலாம் என்பதுடன் அதற்காக தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக கொவிட் அட்டை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version