இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் இடையிலான 3 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கொண்ட தொடரின் முதற் போட்டி இதுவாகும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. ஆரம்பம் முதல் தடுமாறிய இலங்கை அணி குஷல் மென்டிஸ், சரித் அசலங்க ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் ஓரளவு மீண்டது. இருவரும் 60 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். 29 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களும் வீழ்ந்தன. குஷல் மென்டிஸ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து சரித்-ஜனித் லியனகே ஜோடி 64 ஓட்டங்களையும் பகிர்ந்த நிலையில் ஜனித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனது முதற் போட்டியில் விளையாடிய மிலான் ரத்நயாக்க சரித் அலங்கவுக்கு கைகொடுத்து 39 ஓட்ட இணைப்பாட்டத்தைவழங்கினார். அவர் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக 44 ஓட்டங்களை வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க ஜோடி பெற்றுக்கொண்டது. வனிந்து 22 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்க ஓட்டமின்றியும், நிஷான் மதுஷ்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கமிந்து மென்டிசும் ஓட்டமில்லாமல் ஆட்டமிழந்தார். துடுப்பாட வருகை தந்தது முதல் சரித் அசலங்க அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினார். அவருடைய துடுப்பாட்டம் மூலமே இலங்கை அணி ஸ்திரமான நிலை ஒன்றுக்கு வந்தது. இறுதி வரை போராடிய அவர் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது சரித் அசலங்கவின் ஐந்தாவது சதமாகும்.
49.1 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்ட்களை (10 ஓவர்கள் 47 ஓட்டங்கள்) கைப்பற்றினார். டன்ஷிம் ஹசன் சஹிப் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணி பெற்றுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கை இந்த மைதானத்தில் போதுமானது இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் தரும் மைதானம். இலங்கை அணி சார்பாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றனர். இந்த ஓட்ட இலக்கை கட்டுபப்டுத்த இலங்கை அணி போராடவேண்டிய நிலை காணப்படுகிறது.
அணி விபரம்
பங்களாதேஷ்
தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் டாஸ், தௌஹித் ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, தன்சிம் ஹசன், டஸ்கின் அகமட், ரன்வீர் இஸ்லாம், முஸ்டபிசுர் ரஹ்மான்
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, நிஷான் மதுஷ்க, குஷல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ், சரித் அசலங்க, ஜனித் லியனகே, மிலான் ரத்நாயக்க, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷண, எஷான் மாலிங்க, அசித்த பெர்னாண்டோ