இலங்கை, பங்களாதேஷ் முதல் ஒரு நாள்ப்போட்டி ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆர்மபித்துள்ளது. இரு அணிகளும் 3 ஒரு நாள் சர்வதேசப் ;போட்டிகளில் மோதவுள்ளன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க, நிஷான் மதுஷ்க, குஷல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ், சரித் அசலங்க, ஜனித் லியனகே, மிலான் ரத்நாயக்க, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷண, எஷான் மாலிங்க, அசித்த பெர்னாண்டோ

பங்களாதேஷ்
தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் டாஸ், தௌஹித் ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, தன்சிம் ஹசன், டஸ்கின் அகமட், ரன்வீர் இஸ்லாம், முஸ்டபிசுர் ரஹ்மான்

இலங்கை அணி அண்மைக்காலமாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றது. மறுபக்கமாக பங்களாதேஷ் அணி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இலங்கையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் போட்டி நடைபெறுவதனால் இலங்கை அணிக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்டுகிறது.

பங்களாதேஷ் 2024 ஆம் ஆண்டு முதல் விலையடைய 11 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 8 இல் தோல்வியடைந்துள்ளது. இவற்றுள் இலங்கை அணிக்கெதிராக இரண்டு வெற்றிகள். இறுதியாக விளையாடிய 6 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது.

Social Share

Leave a Reply