மீன்பிடி படகு விபத்துகள் குறித்து ஆராய சிறப்பு குழு!

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை துணை அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் நேற்று (29.06) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்று மீன்பிடி படகு விபத்துகளில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

Social Share

Leave a Reply