மின்சார திருத்த மசோதா மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை சபாநாயகர் இன்று (30.06) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, தொடர்புடைய மசோதாவின் பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும், அதன்படி, சிறப்பு நாடாளுமன்ற பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் அளவுகோல்களுக்கு இணங்கும் வகையில் பிரிவுகள் திருத்தப்பட்டால் குறித்த மீறல்கள் பொருந்தாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.