பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இடம் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் 10 குழந்தைகள் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த காலநிலை காரணமாக மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.