செம்மணி புதிய புதைகுழியில் மண்டை ஓடு

செம்மணி புதை குழியில் அகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று(05.07) 3 புதிய என்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 45 என்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இன்னுமொரு புதை குழி இருக்கலாமென அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

புதிதாக அகழ்வு ஆரம்பிக்கப்பட்ட இடத்தில ஒரு மண்டையோடு இனம் காணப்பட்டுள்ளது. செம்மனை புதைக்குழி விவகாரம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. சர்வதேச முன்னணி ஊடகங்கள் கூட செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply