இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இன்று (02.09) பிற்பகல் 12:10 மணிக்கு, ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply