திம்புலாகல மற்றும் திகாவாபி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அமரபுர மகா பீடத்தின் தர்ம ரக்ஷித பிரிவின் உறுப்பினரும், வடமத்திய மாகாண பிரதம நீதிமன்ற சங்க நாயக்கரும், திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபையின் தலைவரும், வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ரஜமஹா விகாரை, திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி தேரர் வணக்கத்திற்குரிய திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதியும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிராந்தியங்களுக்கான பிரதி பிரதம நீதிமன்ற சங்கநாயக்கருமான சமாதான நீதவான் மகாஓய சோபித தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், கிழக்கு மாகாண பிரதம நீதிமன்ற சங்க நாயக்கரும், தீகவாபி பரிவாரக ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியுமான வணக்கத்துக்குரிய சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ போத்தல சந்தானந்த தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version