முன்னணி மின்சாதன வர்த்தக நாமமாக 45 ஆண்டுகளாக தனது பெயரை நிலைநிறுத்தும் உலகப் புகழ்பெற்ற KONKA, இப்போது FLiCo கிளை வலையமைப்பின் மூலம் இலங்கையில் முதன்முறையாக அதன் புதிய தொலைக்காட்சி வரிசையான KONKA V-Max ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த வரிசையில் 32”, 43”, 55” மற்றும் 65” ஆகிய வெவ்வேறு அளவுகளில் TV OS, Web OS, மற்றும் Google TV OS உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் அடங்குகின்றமையும் விசேடம்சமாகும். இந்த தரமிக்க தயாரிப்புகள் அனைத்தும் இதனுடன் ஒருங்கிணைந்த ஒலி அமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன, இது தெளிவான ஒலியை வழங்குவதுடன் அலைவரிசையுடனான கூடுதல் ஒலிப்பட்டை தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தொலைக்காட்சி திரை அணைக்கப்படும்போதும் இசை அல்லது ஒலி பின்னணியை ரசிக்கும் வசதியை வழங்கும் உள்ளமைக்கப்பட்ட சிறந்த சுயாதீன ஒலிப்பட்டை செயற்பாட்டுடன், மேம்பட்ட சப்த உணர்விற்காக சீரான ஒலியியலைக் கொண்ட வீட்டு பொழுதுபோக்குக்காக இந்த தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
Konka V-Max தயாரிப்புகள், சிரமமற்ற ஒலி அமைப்பைக் கொண்டுள்ளது, இது பொதுவான பொழுதுபோக்கு அமைப்பு விரக்திகளைத் தவிர்க்கிறது மற்றும் ரிமோட் மற்றும் வயரிங் சிரமங்களை தவிர்ப்பதுடன் சிறந்த உயர் செயல்திறன் கொண்ட ஒலியை வழங்குகிறது. இதன் அதிநவீன தொழில்நுட்பம் டொல்பி ஆடியோ-மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை தரும் cinema surround sound எனும் திரையரங்க அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வருகிறது. டொல்பி ஆடியோவுடன் கூடிய அதன் உள்ளமைக்கப்பட்ட சவுண்ட்பார், சுவர்கள் மற்றும் கூரைகளில் இருந்து ஒலியைப் பிரதிபலிக்கிறது, இது ஒரு உண்மையான சரவுண்ட் சவுண்ட் சூழலை உருவாக்குகின்றது, உங்களை அதில் லயிக்கச் செய்கிறது. இதன் 30W மொத்த வலுசக்தி வெளியீட்டில், திரைப்படங்கள், விளையாட்டு, செய்திகள், இசை மற்றும் கேமிங் போன்றவற்றுக்கான ஆடியோவுடன் பொருந்தக்கூடிய வகையில் இந்த தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. HDR 10 ஆதரவுடன் தடையற்ற செயல்பாட்டிற்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பைக் கொண்டிருப்பதால். வியப்பூட்டும் காட்சிகளின் வியக்கவைக்கும் ஒலியை உள்ளடக்கி ஆழமான ஒலி, டொல்பி ஆடியோ மற்றும் மேம்பட்ட ஸ்மார்ட் OS தெரிவுகளால் இயக்கப்படும் சிறப்பான மற்றும் மென்மையான தடையற்ற, செயல்திறன் கொண்ட அதன் பிரத்யேக அம்சங்களை கொண்டிருப்பதால் Konka V-Max தற்போது உலகம் முழுவதும் விரும்பப்படும் தெரிவாக உள்ளது.
புதுமையான தயாரிப்புகளின் புதிய வரம்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், 45 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மின்சாதன பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் KONKA, அதன் அசைக்க முடியாத நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. மின்சாதன கொள்வனவு கோரிக்கைகளை செயல்படுத்தும் ஒரு சிறிய தொழிற்சாலையிலிருந்து தேசிய வர்த்தக நாமமாக தனது செயல்பாடுகளை ஆரம்பித்து, ஒவ்வொரு உறுதியான சவாலையும் தீர்க்க முழுமையாக்க நம்பிக்கையுடன் செயற்பட்டு, நுகர்வோர் மின்னணுவியல் முதல் குறைக்கடத்திகள் வரை முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வென்று வருகிறது. ‘தொழில்நுட்பம் மூலம் ஒரு வலுவான தேசத்தை உருவாக்குதல், தொழில்துறை மூலம் நாட்டிற்கு சேவை செய்தல்’ என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, இந்த பெருநிறுவன ஜாம்பவான்கள், புதிய தயாரிப்புகளுடன் புதிய சந்தைகளை தொடர்ந்தும் ஆராய்ந்து, தேசிய வர்த்தக நாமத்தை கடல்தாண்டி விரிவுபடுத்தி, சர்வதேச ரீதியிலும் வேரூன்றி, KONKA உணர்வை எப்போதும் காலத்துடன் எதிரொலிக்கச் செய்கின்றனர்.
அந்த உணர்வையும் பாரம்பரியத்தையும் முன்னோக்கி நகர்த்துவதற்கு கூட்டாக இணைந்து, தேவையை நிறைவேற்றுவதில் முன்னணி வகித்து, பெருநிறுவனத் துறையில் மற்றொரு புரட்சிகர, விரிவாக்கத்திற்கான புதிய வழிகள் மற்றும் முயற்சிகளை ஆராயும் சவாலையும் இக்குழுமம் ஏற்றுக்கொண்டது. வர்த்தக சூழல், சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் மனநிலை தொடர்பான நிபுணத்துவ அறிவு மற்றும் அனுபவத்துடன் கூடிய, Future Life Holdings குழுமம், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக மூலோபாயத் திட்டங்கள் மற்றும் தளங்களை மறுசீரமைப்பதில் முன்னணியில் உள்ளது. மதிப்புகள், கொள்கைகள் மற்றும் நெறிமுறை நடைமுறைகளின் தொகுப்பைக் கடைப்பிடித்து, தகுதியானவர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க இக்குழுமம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. Future Life Holdings குழுமத்தின் மூலோபாய வழிகாட்டுதல்களின் கீழ் பல துணை நிறுவனகளைக் கொண்டு தற்போது குழுமமாக அமையப்பெற்றுள்ளது. Future Life Holdings நிறுவனமானது, வழிகாட்டுதலை வழங்கும் ஒரு கலங்கரை விளக்கமாக செயல்பட்டு வலுவாக நிற்பதுடன் ஒரு இடையகமாகவும் செயல்படுகிறது. Future Life Holdings நிறுவனமானது, ஒரு குழுமமாக, ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் பயனுள்ள பங்களிப்புடன், சவால்களை சமாளித்து, குழுவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கும் குழுப்பணியை உறுதியாக நம்புகிறது. குழுமத்தில் மனித வளத்தை மேம்படுத்தும் அதே வேளையில், Future Life Holdings நிதி நிலைத்தன்மையையும் எந்தவொரு சந்தை சூழ்நிலையிலும் செயல்படுவதற்கான மூலோபாய திட்டங்களையும் கொண்டு செயற்படுகிறது.
இந்த குழுமம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து வருவதன் மூலம் பல்வேறு வழிகளில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் குறிப்பிட்ட இணைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இக்குழுமம் பரந்த கிளை வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டு உத்திகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது, அதில் FLiCo முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் வாழ்க்கை, உங்கள் ஸ்டைல் என்ற கருப்பொருளின் கீழ், FLiCo நீடித்த மதிப்பையும் உயர் செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் புதுமையான தொழில்நுட்பத்துடன் அன்றாட அனுபவங்களை மாற்றுவதுடன், FLiCo கவர்ச்சிகரமான விலையில் KONKA போன்ற புகழ்பெற்ற உலகின் தனித்துவமான வர்த்தக நாமங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்கின்றது. தொழில்முறை நிறுவல்கள், தொழில்துறை மற்றும் வீட்டு உபகரணங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான நிகரற்ற சேவை மற்றும் பல உள்நாட்டு வர்த்தக நாமங்களைக் கொண்ட மின் சாதனங்களுக்கான நம்பகமான பழுதுபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விதிவிலக்கான சேவைகளென அதன் வாக்குறுதி நீடிக்கிறது. FLiCo நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் துறையில் முதல் 5 சந்தை நிலையை அடைதல், சந்தைப் பங்கை விரிவுபடுத்துதல், வர்த்தக நாம இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். 2027/28 ஆம் ஆண்டில் 10 பில்லியன் விற்பனையையும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 20 பில்லியன் ஒட்டுமொத்த விற்பனையையும் அடைவதும் இதில் உள்ளடங்கும்.
உலகளவில் புகழ்பெற்ற மற்றும் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமமான KONKA, Future Life Holdings மற்றும் FLiCo ஆகியவற்றுடன் கைகோர்த்து, இலங்கையின் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களின் வலுவான கலவையானது, எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையர்களின் வாழ்வியயில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
