நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் பயிற்சிப்பட்டறை!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ‘தொடர்ந்து படி… தூத்துக்குடி’ 6ஆவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கவிதை: வாசித்தலும் புனைதலும் என்னும் பொருண்மையில் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 25, 2025 முதல் ஆகஸ்ட் 30 2025 வரை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத்இ இ.ஆ.ப.இ அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறை மாணவர்களுடன் கலந்துரையாடினார். சங்க இலக்கியக் கவிதைஇ மரபுக்கவிதைஇ புதுக்கவிதைகள் பற்றி கலந்துரையாடினார். எதிர்கால சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பவர்கள் மாணவர்கள். இம்மாணவர்களின் வாசிப்புத்திறன், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன், படைப்பாற்றல் போன்றவற்றை வளப்படுத்த இம்மாதிரியான பயிற்சிப்பட்டறை மிகவும் அவசியம் என்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குனர் பேரா. வெளியப்பன், கல்லூரி முதல்வர் முருகானந்தம், கோவில்பட்டி பொன்னூஸ் நேச்சுரல்ஸ் தயாரிப்பு நிறுவனர் பொன்னுச்சாமி ஆகியோர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஆறு நாட்கள் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில், தமிழ்ப் படைப்புச் சூழலில் செய்யுள் – பாடல் – கவிதை: பன்முகப் பரிமாணங்கள், வரையறைகள், வளர்ச்சி நிலைகள். என்னும் தலைப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. பூமிச்செல்வம் பயிற்சியளித்தார்.

கவிஞர் இந்துமதி காலந்தோறும் தமிழ்க் கவிதைகளில் காட்சிப்படும் ‘பெண்ணுலகம்’, என்னும் தலைப்பிலும், பயண எழுத்தாளர் ப. சுதாகர் உன்மத்தம் ஊட்டும் கவிதைகளின் ‘ரசவாத அழகியல்’ என்னும் தலைப்பிலும், நவீனக் கவிதை: புரிதலும் புரிதலுக்கான முயற்சிகளும் கவிஞர் லிபி ஆரண்யா என்னும் தலைப்பிலும், கவிஞர் யவனிகா ஸ்ரீராம் 80களுக்குப் பிந்தைய தமிழ்க் கவிதைகளில் ‘நவீன இஸங்களின் இழைவுகள்’ என்னும் தலைப்பிலும், பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் கா. உதயசங்கர் நவீனக் கவிதை ஆளுமையர்: தொடக்க காலத் தமிழ்க் கவிதைகளை முன் வைத்து… என்னும் தலைப்பிலும், பேராசிரிர் அ. ராமசாமி, நிகழ்த்துதலுக்கான கவிதைகள் என்னும் தலைப்பிலும், கவிஞர் அ. இலட்சுமி காந்தன் இடதுசாரிப் படைப்பாளர்களின் கவிதையாக்க முயற்சிகள் என்னும் தலைப்பிலும் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

தமிழ்நாடு மகளிர் பாதுகாப்பு ஆணையக்குழு உறுப்பினர் செல்வி மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி பேசினார். ஐவகை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தை குறிக்கும் சூரங்குடி அருகில் உள்ள தேரிகாட்டை பார்வையிட்டனர். 100 கவிஞர்களின் மிகச்சிறந்த கவிதைகளைத் தொகுத்து மாணவர்களுக்கு வழங்கி பயிற்சியளித்தனர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 22 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பயிற்சிப்பட்டறை முடிந்துஇ தூத்துக்குடி ஆறாவது புத்தகத்திருவிழாவில் கவிதை வாசித்தல்இ நூல் விமர்சனங்கள் கவியரங்கம் மற்றும் புதுக்கவிதைகளை நாடகமாக அரங்கேற்றம் செய்தனர்.

வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அவர்கள் சான்றிதழ் மற்றும் கொங்கு தேர் வாழ்க்கை – 2 (145 கவிஞர்களின் கவிதைகள்) என்னும் கவிதைத் தொகுப்பு நூலினை பசிசாக வழங்கினார். இம்பயிற்சிப்பட்டறையை ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி, கல்லூரி உதவிப்பேராசிரியர்கள் சிவகுமார், சித்ரா தேவி, இமானுவேல், சிவசுப்பிரமணியன், ரவிநாராயணன், உடற்கல்வி இயக்குநர் கணேசன், அலுவலகப்பணியாளர் கணேசன் ஆகியோர் ஒங்கிணைந்து நடத்தினர்.

நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் பயிற்சிப்பட்டறை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version