மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுகளுக்கான செயற்திட்ட மீளாய்வு கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீப் அவர்களின் தலைமையில் (04.09) ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல துறை சார்ந்த அபிவிருத்திக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக மன்னார் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version