கடுமையாக்கப்படவுள்ள போக்குவரத்துச் சட்டம்!

போக்குவரத்துச் சட்டம் இன்று (08.09) முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனங்களை ஆய்வு செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணிக்க தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

மேலதிக வண்ணங்களில், அலங்கார விளக்குகளுடன் இயங்கும் மற்றும் விளம்பரங்களைக் காண்பிக்கும் வாகனங்கள் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் ஹோன்கள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version