சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்!

கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத் தளங்கள் மீதான அரசாங்கத்தின் தடையை எதிர்த்து இளைஞர்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இளைஞர்களும் இடையில் ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

நேபாள அரசாங்கம் சமீபத்தில் பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்திருந்தது.

Social Share

Leave a Reply