முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைபெற வேண்டியிருந்தது குறித்து தனது ‘X’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தனது தந்தை தாம் அனைத்தையும் ஆரம்பித்த இடத்திற்குகே திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உண்மையான பலம் பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து வருவதல்ல எனவும், மக்களின் அன்பிலிருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (11.09) விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
‘ஜனாதிபதிகள் உரிமைகள் (ரத்து) சட்டத்தின்’ விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் இது நேர்ந்தது.