இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாத்துவ – மொரந்துடுவ பிரதான வீதியின் மெலாகம பகுதியில் இன்று (24.02) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் இரு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இல்லை எனவும், எனினும், விபத்தின் காரணமாக இரு பேருந்து சாரதிகளும் காயமடைந்து பானந்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சாரதிகளில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து காரணமாக குறித்த வீதியில் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பின்னர் பொலிசாரின் தலையீட்டுடன் போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version