வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது!

ருமேனியாவில் வேலை வழங்குவதாக கூறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அனுமதி இன்றி சுமார் ரூ.16 மில்லியன் மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SLBFE-யின் சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி வேலை வாக்குறுதி அளித்து பணம் பெற்ற 15 முறைப்பாடுகளின் அடிப்படியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல மாதங்கள் தலை மறைவாயிருந்த நிலையில், கொலன்னாவ பகுதியிலுள்ள வழக்கறிஞர் ஒருவரின் இல்லத்தில் வேலை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடும் மறைமுக நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை மார்ச் 3ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடபட்டுள்ளது. மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version