இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!

இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடர் இல் இருந்து இலங்கை அணி அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.

சுப்பர் 8 சுற்றின் குழு 2-இல் இங்கிலாந்து அணியிடம் ஏற்கனவே தோல்வியடைந்திருந்த இலங்கை, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானதத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான முக்கியமான போட்டியிலும் தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நியூசிலாந்தின் கட்டுப்பாடான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் றஷின் றவீந்திர 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியதுடன், போட்டியின் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply