2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தலையிட வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (26.02) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும் எனவும், இது எந்த வகையிலும் அரசியலாக்கப்படக் கூடாது என்றும், CID மேற்கொள்ளும் சுயாதீன விசாரணைகள் தடையில்லாமல் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விசாரணைகளைத் தடுக்க முயற்சிப்பது, உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்யும் பாரிய அநீதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.