நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவாதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்திலும் ரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாலை நேரங்களில் நாடு முழுவதும் இடையிடையே பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.