தலிபான் அமைப்பின் தலைமையகத்தை தாக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வான்படை, தலிபான் அமைப்பின் தலைமையகத்தை இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூல் நகரில் அமைந்துள்ள தலிபான் தலைமையகத்தின் மீது இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைப் பகுதிகளில் தீவிரமடைந்த மோதல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த சம்பவம் தற்போது எல்லை மோதலைத் தாண்டி வெளிப்படைப் போராக மாறியுள்ளதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாவது, காபூல் மற்றும் கந்தகார் நகரங்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply