இந்தியா வெற்றி – அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது!

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் T20 தொடரின் சுப்பர் எய்ட்ஸ் – குழு 1 சுற்றில் இந்தியா அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாவே அணியை தோற்கடித்து அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா முழுமையான ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றது/

அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார். இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ஓட்டங்கள். சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஹார்டிக் பாண்ட்யா வேகமாக அடித்தாடி 23 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

257 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பதிலளித்த சிம்பாவே அணி தொடக்கத்தில் சற்றே தடுமாறியது. எனினும், பிரையன் பென்னெட் சிறப்பாக துடுப்பாடி 59 பந்துகளில் 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். சிகந்தர் ரசா 21 பந்துகளில் 31 ரன்கள் பெற்றுக்கொண்டார். சிம்பாவே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் வழங்கி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றுமணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ளும். சிம்பாவேயின் தோல்வியின் மூலம் தென்னாபிரிக்கா அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version