தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்யா விலகுவாரா?

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் இன்றைய ‘சூப்பர் எட்டு’ சுற்றுப் போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகஉள்ளதாக என கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உலகக் கின்னத் தொடரின் நிறைவுக்குப் பிறகு தனது பொறுப்பிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சனத் முன்னதாகவே கூறியிருந்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, தலைமை பயிற்சியாளராக தனது ஒப்பந்தம் செல்லுபடியாக இருந்தாலும், உலகக் கிண்ண போட்டிகளின் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கும் எண்ணம் இல்லை என அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான இலங்கைத் தொடருக்காக சனத் முதன்முதலில் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமை பயிற்சியாளராக உறுதிப்படுத்தப்பட்டார்.

அவரது பயிற்சிக் காலத்தில், இலங்கை அணி அனைத்துப் போட்டி வடிவங்களிலும் மொத்தம் 74 ஆட்டங்களில் பங்கேற்று 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. மேலும் இரண்டு போட்டிகள் சமநிலையுடன் முடிவடைந்துள்ளன.

இதனிடையே, உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply