சுகாதார அமைச்சில் உள்ள உணவகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

மருதானை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், சுகாதார அமைச்சின் பிரதான உணவகத்திற்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சில் உள்ள குறித்த உணவகம் அசுத்தமான சூழலில் அமைந்துள்ளதுடன்,அசுத்தமான முறையில் உணவுகள் பரிமாறப்படுவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உணவகத்தின் குளிர்சாதன பெட்டிகளில் பச்சை இறைச்சி, மீன் மற்றும் கொத்து ரொட்டி ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன, உணவின் பொருட்கள் லேபிள்களில் குறிப்பிடப்படவில்லை, குப்பைத் தொட்டிகள் எப்போதும் திறந்திருந்கின்றன, உணவு மற்றும் பானங்களில் அதிக எண்ணிக்கையிலான ஈக்கள் இருக்கின்றன, வடிகால் அமைப்பு அசுத்தமாக இருந்தது, உணவக ஊழியர்களிடம் மருத்துவ சான்றிதழ்கள் இல்லை என்ற காரணங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தொடர்ச்சியான சோதனைகள் மூலம் உணவுச் சட்டத்தை மீறும் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா உணவு விற்பனை நிலையங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version