ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று (03.03) அதிகாலை இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலின் காரணமாக தூதரக வளாகத்தில் குறுகிய அளவிலான தீப்பரவல் ஏற்பட்டதுடன், சிறிய பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் சில ட்ரோன்கள் தூதரக வளாகத்தை குறிவைத்து பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply