இலங்கையில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்!

சர்வதேச மட்டத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுடன் தொடர்புடைய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தூதரகங்கள், உயர் ஆணையங்கள் மற்றும் அவற்றின் அதிகாரப்பூர்வ இருப்பிடங்கள் மட்டுமின்றி, தொடர்புடைய பிற வளாகங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பும் இந்த உத்தரவுகளில் அடங்கும். அவர்களின் வீடுகள், வணிக நிலையங்கள், சுற்றுலா தளங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர்களும் சொத்துகளும் பாதுகாப்பாக இருக்க 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான பட்சத்தில் ஆயுதப்படைகளின் உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply