ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமேனி (56) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் நிபுணர்கள் சபை நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 36 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அலி காமேனி, சமீபத்தில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், சர்வதேச மற்றும் பிராந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகங்கள் இதனை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டின் இடைக்கால நிர்வாக பொறுப்புகளை கவனிக்க அயதுல்லா அலி-ரேசா அராஃபி தலைமையில் தற்காலிக கவுன்சில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.