மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் மிக விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்தப் போர் இந்த வாரத்திற்குள் முடிவடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
மேலும், ஈரான் ஏற்கனவே அதன் தலைவரை உட்பட பல முக்கிய இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரானின் அனைத்து அணு மற்றும் ஏவுகணை தளங்களும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது அந்த நாட்டிடம் மிகக் குறைந்த இராணுவ சக்தி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த மோதல் மிக விரைவில் முடிவடையும் எனவும் டொனால்ட் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.