பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை!

டீசல் விலை உயர்ந்திருந்தாலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று (09.02) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், அது பேருந்து கட்டண திருத்தங்களில் தாக்கம் ஏற்படுத்தாது என ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டா கூறினார்.

இதனால் தற்போதைய பேருந்து கட்டணங்கள் அப்படியே தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.22 மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலையை ரூ.24 அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சினோபெக் மற்றும் இந்தியன் எரிபொருள் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன.

Social Share

Leave a Reply