சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து ரொஷான் அபேசிங்க CIDயில் முறைப்பாடு!

சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்க சமூக ஊடகங்களில் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் கூறி, குற்றப்புலனாய்வு பிரிவில் (CID) முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நற்பெயருக்கு சேதம் ஏற்படும் வகையில் ஒருவரும், ஒரு குழுவும் அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவின் ஆலோசனைக்கு இணங்க சட்ட நடவடிக்கை எடுக்க CIDயில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரொஷான் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply