ஈரானிய மாலுமிகளின் உடல்களை மீண்டும் கையளிக்க உத்தரவு!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல் சம்பவத்தில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர் அறைகளில் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஒப்படைக்குமாறு தலைமை நீதவான் சமீர தொடங்கொட இன்று (11.03) உத்தரவிட்டுள்ளார்.

காலி துறைமுக காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமீபத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena மூழ்கிய பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டு நடமாடும் குளிர் அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

Social Share

Leave a Reply